பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி

சென்னை கோயம்பேடு, பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது.;

Update:2021-05-21 11:41 IST
பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு, பாரதி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் பூஜா (வயது 22). இவர், கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-

நான் என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகிறேன். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனது செல்போனில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் இருந்த செயலியை பதவிறக்கும் செய்து, ரூ.1 லட்சம் செலுத்தினால் அதற்கான வட்டி ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை கிடைக்கும் என கூறப்பட்டு இருந்தது.

அதை உண்மை என நம்பி ரூ.1 லட்சம் செலுத்தினேன். ஆனால் அதன் பிறகு அந்த செல்போன் செயலி முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது. பின்னர்தான் நூதன முறையில் என்னிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது. என்னிடம் மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

அதன்பேரில் கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்