தஞ்சை அருகே வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை

தஞ்சை அருகே வீடு, வீடாக சென்று சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

Update: 2021-05-17 12:47 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த ராமநாதபுரம் ஊராட்சியில் உள்ள அன்னை சிவகாமி நகரில் கொரோனா பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. டாக்டர் நித்யா தலைமையில் நடந்த இந்த முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் பழனிசாமி, கனிகண்ணன் மற்றும் ஆய்வக நுட்பனர் சிவசுந்தரி செவிலியர் கல்பனா ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டனர். உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பிரபாகரன் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சிசுந்தரம் ஊராட்சி செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த முகாம் நடைபெற்றது.

முகாமை ஊராட்சி மன்ற தலைவி குழந்தையம்மாள் ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் அண்ணா கோபிநாத் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வீடு, வீடாக சென்று...

ஆனால் இந்த முகாமில் பொதுமக்கள் அதிகளவில் வராததால் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அந்தப்பகுதியில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்