தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2021-05-17 12:39 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் போலீஸ் துறை அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் அலுவலக நிர்வாக அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி நகர் நல அலுவலர் வித்யா, டாக்டர் ஜல்சி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்