மயிலாடுதுறை சித்தர்காடு நவீன அரிசி ஆலையில் ராஜகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு
மயிலாடுதுறை சித்தர்காடு அரசு நவீன அரிசி ஆலையில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகளை ராஜகுமார் எம்.எல்.ஏ., திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை சித்தர்காடு அரசு நவீன அரிசி ஆலையில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகளை ராஜகுமார் எம்.எல்.ஏ., திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்று உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்ய வந்துள்ளதாக அங்கிருந்த வட்ட வழங்கல் அலுவலர் சாந்தியிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து அரிசி மூட்டைகளின் அரிசி மாதிரிகளை எடுத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் தொலைபேசி மூலம் அங்கிருந்து பேசினார்.
அப்போது அவருடன் தி.மு.க. மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் ராம.சேயோன், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் சிவதாஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் ராம்குமார், அன்பழகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.