கொரோனா தடுப்பு பணிக்கு அனைத்து மருத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார்; புதுச்சேரி பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் நமச்சிவாயம் தகவல்

பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-05-17 11:31 GMT

பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தார். புதுவை மக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் உபகரணங்களையும் வழங்க தயார் என்று உறுதிமொழி அளித்து இருக்கிறார்.

நமது மாநில மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு விசாரித்து, தற்போதைய சூழ்நிலைகளை தாயுள்ளத்தோடு கேட்டறிந்த பிரதமருக்கு புதுச்சேரி மக்கள் சார்பாகவும், பா.ஜ.க. சார்பாகவும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மத்திய அரசு மூலம் வழங்கப்படுகின்ற அனைத்து மருத்துவ உதவிகளும் உபகரணங்களும் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார். இது நம் மாநில மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனாவை புதுச்சேரியில் இருந்து விரட்டுவதற்கு, மத்திய அரசு மேற்கொண்ட துரிதமான முயற்சிகள் இதிலிருந்து தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்