சித்தமல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அங்காடியில் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவித்தொகை

சித்தமல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அங்காடியில் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவித்தொகை செல்வராசு எம்.பி. வழங்கினார்.

Update: 2021-05-17 10:00 GMT
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சித்தமல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அங்காடியில் தமிழக அரசின் கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.2ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.பி. ஏ.கே. எஸ்.விஜயன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் செல்வராசு எம்.பி. கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கி தொடங்கி வைத்தார். இதில் நொச்சியூர் ஊராட்சி மன்ற தலைவர் இனியசேகரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் தண்டாயுதபானி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்