திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் 200 முன்கள பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள்
திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் 200 முன்கள பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
திருவாரூர்,
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்திட அரசு பல்வேறு கட்டுபாடுகளுடன் ஊரடங்கினை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட அரிசி குடும்ப அட்டைதாரருக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண உதவித்தொகை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பூண்டி கலைவாணன் 10 கிலோ அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, சீனி, மஞ்சள் தூள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய பையை வழங்கினார். இதில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சண்முகம், நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா, முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.