முழு ஊரடங்கையொட்டி காஞ்சீபுரம் நகர சாலைகள் வெறிச்சோடின

தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

Update: 2021-05-17 00:14 GMT
காஞ்சீபுரம், 

கொரோனா தொற்று 2-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் காஞ்சீபுரம் நகரின் முக்கிய சாலைகளான காந்தி சாலை, காமராஜர் சாலை, அன்னை இந்திராகாந்தி சாலை உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் சிறிய தெருக்கள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் காரணம் இல்லாமல் வாகனங்களில் வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். சரியான காரணம் சொல்லாதவர்களுக்கு அபராதம் விதித்தும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகின்றன. மருத்துவம் சம்பந்தப்பட்ட கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்