நம்பியூர், ஊஞ்சலூர், கொடுமுடி பகுதியில் நூற்பாலை தொழிலாளர்கள் உள்பட 137 பேருக்கு கொரோனா

நம்பியூர், ஊஞ்சலூர், கொடுமுடி பகுதியில் நூற்பாலை தொழிலாளர்கள் உள்பட 137 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-16 22:39 GMT
ஈரோடு 
நம்பியூர், ஊஞ்சலூர், கொடுமுடி பகுதியில் நூற்பாலை தொழிலாளர்கள் உள்பட 137 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நூற்பாலை தொழிலாளர்கள்
நம்பியூர் அருகே உள்ள மீன்காரன்பாளையத்தில் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் 5 பேர் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து 5 பேரும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இங்கு வேலை செய்யும் சுமார் 370-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் 49 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து தனியார் நூற்பாலைக்கு 14 நாட்கள் சீல் வைக்கப்பட்டது. மேலும் அவர்களுடன் பணிபுரிந்த அனைவரும் அங்கேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நம்பியூர் தாலுகாவுக்கு உள்பட்ட பகுதியில் 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் நம்பியூர் பகுதியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 79 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
ஊஞ்சலூர்
இதேபோல் ஊஞ்சலூர் பகுதியில் தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. பாசூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பச்சாம்பாளையத்தில் 43 வயதுடைய ஆண், கொளாநல்லி ஊராட்சிக்கு உள்பட்ட சத்திரத்தில் 27, 54, 36 வயதுடைய 3 பெண்கள், கொளத்துப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கருக்கம்பாளையத்தில் 41 வயதுடைய ஆண், கிளாம்பாடி பேரூராட்சிக்கு உள்பட்ட கருமாண்டாம்பாளையத்தில் 37 வயதுடைய ஆண் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் டாக்டர்கள் அறிவுரையின்படி தங்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.
மேலும் அந்தப் பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்தும், பீளீச்சிங் பவுடர் போட்டும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 
கொடுமுடி
அதுமட்டுமின்றி கொடுமுடி அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்த 42 வயது ஆண்கள் 2 பேர், 53 வயது ஆண், கல்வெட்டு பாளையத்தை சேர்ந்த 32 வயது பெண், 33 வயது ஆண், தாமரைபாளையத்தை சேர்ந்த 36 வயது ஆண், 29 வயது பெண், 6 வயது சிறுவன், வருந்தியாபாளையத்தை சேர்ந்த 54 வயது மற்றும் 55 வயது பெண்கள், 29 வயது ஆண், கொடுமுடியை சேர்ந்த 58 வயது மற்றும் 73 வயது பெண்கள், 37 வயது, 48 வயது மற்றும் 50 வயது ஆண்கள், 12 வயது சிறுவன் மற்றும் வடக்கு புதுப்பாளையம், சுல்தான்பேட்டை, ராசாம்பாளையம், சின்னக்கண்டணூர் ஆகிய  பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
நம்பியூர், ஊஞ்சலூர், ெகாடுமுடி பகுதியில் ெமாத்தம் 137 ேபருக்கு ெகாரோனா ெதாற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்