தலைவாசல் அருகே 2 இறைச்சி கடைக்காரர்களுக்கு அபராதம்
தலைவாசல் அருகே 2 இறைச்சி கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தலைவாசல்:
தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அபராதமும் விதிக்கப்பட்டது. தலைவாசல் அருகே வீரகனூர் மற்றும் வேப்பம்பூண்டி ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கில் இறைச்சி கடை வைத்திருந்த 2 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.