தலைவாசல் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து 6 ஆயிரம் முட்டைகள் உடைந்து நாசம்

தலைவாசல் அருகே, சரக்கு வேன் கவிழ்ந்து 6 ஆயிரம் முட்டைகள் உடைந்து நாசம் ஆனது.

Update: 2021-05-16 20:54 GMT
தலைவாசல்:
தலைவாசல் அருகே, சரக்கு வேன் கவிழ்ந்து 6 ஆயிரம் முட்டைகள் உடைந்து நாசம் ஆனது.
சரக்கு வேன் கவிழ்ந்தது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெள்ளைக்கல் பகுதியில் வசிப்பவர் ஆனந்தன் (வயது 30).
இவர் நாமகிரிப்பேட்டையில் இருந்து சரக்கு வேனில் முட்டைகள் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி புறப்பட்டார். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சார்வாய்புதூர் வந்தபோது சரக்கு வேன் டயர் வெடித்து சிறிதுதூரம் சென்று ரோட்டில் கவிழ்ந்தது.
முட்டைகள் நாசம்
இந்த விபத்தில் சரக்கு வேனில் இருந்த 6 ஆயிரம் முட்டைகள் உடைந்து நாசம் ஆனது. உடைந்த முட்டைகள் ரோட்டில் ஆறுபோல் ஓடியது. பொதுமக்கள் சிலர் சேதமான முட்டைகளை எடுத்துச் சென்றனர்.
இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து வந்து ஆறாக ஓடிய முட்டைகளை தண்ணீர் பீய்ச்சி அடித்து சாலையை சுத்தம் செய்தனர். இதுகுறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்