ஆத்தூர் பகுதியில் தொழில் அதிபர் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி
ஆத்தூர் பகுதியில் தொழில் அதிபர் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.
ஆத்தூர்:
ஆத்தூர், நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். தாண்டவராயபுரத்தை சேர்ந்த 47 வயதான பெட்ரோல் பங்க் உரிமையாளர், மஞ்சினியை அடுத்த ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்த 70 வயது சேகோ பேக்டரி உரிமையாளர், சீலியம்பட்டியை சேர்ந்த இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த நிர்வாகி, ஆத்தூர் நகரசபை டிரைவராக பணிபுரிந்த ஒருவர் ஆகிய 4 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.