ஊரடங்கை மீறி உணவகம் திறந்த உரிமையாளர் கைது

ஊரடங்கை மீறி உணவகம் திறந்த உரிமையாளர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-05-16 20:35 GMT
ஆவூர்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதையொட்டி மாத்தூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாத்தூர் கடைவீதியில் இறைவன் நகரை சேர்ந்த சேகர் (வயது 39) என்பவர் தனது உணவகத்தை திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். இதனை கண்ட போலீசார் ஊரடங்கை மீறி உணவகம் திறந்ததாக சேகர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்