கோவையில் தம்பியை குத்திக்கொன்ற அண்ணன் கைது

கோவையில் தம்பியை குத்திக்கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-16 20:31 GMT
தம்பியை குத்திக்கொன்ற அண்ணன் கைது
கோவை,

கோவை கரும்புக்கடை பூங்கா நகரை சேர்ந்தவர் தவுபிக் (வயது23). இவர் வேலைக்கு செல்லாததால் வீட்டில் பணம் வாங்கி வந்தார். தவுபிக் கிற்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்ததால் செலவுக்கு பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டார். 

மேலும் அவர், ஆத்திரத்தில் தனது அண்ணன் ஜாகிர்உசேன் (27) செல்போனை கீழே எறிந்து உடைத்து உள்ளார். அதோடு  தனது தாய் மற்றும் தங்கையையும் தாக்கியதாக கூறப்படுகிறது.இதை பார்த்து ஆத்திரம் அடைந்த ஜாகிர் உசேன், அருகில் இருந்த கத்தியை எடுத்து தவுபிக்கை குத்தி உள்ளார். 

இதில் படுகாயம் அடைந்த தவுபிக்கை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்றி தவுபிக் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தம்பியை கத்தியால் குத்தி கொன்ற  ஜாகிர் உசேனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்