புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்

Update: 2021-05-16 20:26 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 334 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 233 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் 149 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 932 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 2 ஆயிரத்து 129 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் கொரோனாவுக்கு மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்