அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி
சிவகிரியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.
சிவகிரி, மே:
சிவகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதியை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.