வீணாகும் குடிநீர்
வெம்பக்கோட்டை அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அணையில் இருந்து சிவகாசி நகராட்சிக்கு குழாய் மூலம் குடிநீர் செல்கிறது. இந்தநிலையில் வெம்பக்கோட்டை துணை மின் நிலையம் அருகே உள்ள வால்வு உடைந்து தண்ணீர் வீணாகி செல்கிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாக செல்வதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.