சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update:2021-05-17 01:21 IST
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்த மணிவேலின் மகன் பாலகிருஷ்ணன்(வயது 26). இவர் சிமெண்டு கற்கள் (ஹாலோ பிளாக்) செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர், 17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகியதில், தற்போது அந்த சிறுமி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மீராபாயிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து தலைமறைவாக இருந்த பாலகிருஷ்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரியலூர் சிறையில் போலீசார் அடைத்தனர். அந்த சிறுமி, அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகேயன் மூலம் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்