டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது
திசையன்விளை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
திசையன்விளை, மே:
திசையன்விளை அருகே பெட்டைகுளத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் கடந்த 10-ந் தேதி இரவு சுவரில் துளை போட்டு மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த 1,070 மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்த கொள்ளை தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கால்வாய் திருவேங்கடம்பட்டி அம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த மணி (எ) பாலகிருஷ்ணன் (வயது 35), சுப்பிரமணியபுரம் வேத கோவில் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேஷ் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்களை கடத்த பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளையடித்த மதுபாட்டில்களை இடைச்சிவிளையில் உள்ள ஒரு தோட்டத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.