மேலும் 439 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 439 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 439 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 26,330 ஆக உயர்ந்துள்ளது.
21,909 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 4,194 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 284 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் 693 கொரோனா சிகிச்சை படுக்கை கள் காலியாக உள்ளன. விருதுநகர் சங்கரலிங்கபுரம், பெத்தனாட்சி நகர், தாதம்பட்டி, ஒண்டிப்புலி, முதலிப்பட்டி, சூலக்கரை, ஆவுடையாபுரம், சின்ன வள்ளி குளம், பாண்டியன் நகர், என்.ஜி.ஓ. காலனி, ஆர்.எஸ். நகர், எம்.ஜி.ஆர். நகர், முத்துராமன் பட்டி, அல்லம்பட்டி, புறவழிச்சாலை, அழகாபுரி, பாலாஜி நகர், நக்கீரர்தெரு, கந்தபுரம் தெரு, ராமமூர்த்திரோடு, அரசு ஆஸ்பத்திரி, மாவட்ட போலீஸ் அலுவலகம், மாடர்ன்நகர், கத்தாளம்பட்டி, நிறைவாழ்வு நகர், சின்ன பள்ளிவாசல் தெரு, சின்ன வள்ளி குளம், முத்துராமன் பட்டி, கத்தாளம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் சாத்தூர் வேப்பிலைப்பட்டி, செம்பட்டி, கரிசல்குளம், மலைப்பட்டி, மம்சாபுரம், ஆராய்ச்சி பட்டி, புதூர், கோட்டையூர், ராஜபாளையம், சேத்தூர், தேசிகாபுரம், வத்திராயிருப்பு, ராமச்சந்திராபுரம், துலுக்கப்பட்டி, முகவூர், மேட்டுப்பட்டி, நத்தத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாநிலப்பட்டியலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 439 என குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட பட்டியலில் 624 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முரண்பாடு ஏன் என்று தெரியவில்லை. தொடர்ந்து ஏற்பட்டு வரும் இந்த எண்ணிக்கை முரண்பாடுகள் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.