இலவச ஓவியப்பயிற்சி

பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச ஓவியப்பயிற்சி;

Update: 2021-05-16 19:07 GMT
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் விநாயகபுரம் காலனியை சேர்ந்தவர் தவம் (வயது 38). இவர் ஓவிய பணி செய்து வருகிறார். வருடந்தோறும் சிறுவர், சிறுமியருக்கு இலவசமாக ஓவிய பயிற்சி அளித்து வருகிறார். தற்போது கொரோனா கட்டுப்பாடுடன் அரசு ஊரடங்கு உத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால் அரசு தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. பள்ளி செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கும் சிறுவர், சிறுமிகள் முடங்கிப் போய் உள்ளனர். இதனால் ஆர்வம் குறைவாக காணப்பட்டு, மனச்சோர்வுடன் இருந்து வந்தனர். 
இதை தெரிந்துகொண்ட அவர் பள்ளிக்குழந்தைகளுக்கு தன் வீட்டு முன்பாக சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து ஓவியப் பயிற்சி அளித்து வருகிறார். கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் வருவாய் இழந்து வாழ்வாதாரம் பாதித்திருக்கும் இந்த வேளையில் வீட்டில் முடங்கிப் போயிருக்கும் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக இந்த ஓவிய சேவையை செய்து வரும் ஓவியருக்கு இப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்