வடக்கன்குளத்தில் கொரோனா அறிகுறி கண்டறியும் முகாம்
வடக்கன்குளத்தில் கொரோனா அறிகுறி கண்டறியும் முகாம் நடந்தது.;
வடக்கன்குளம், மே:
கொரோனா 2-வது அலை தீவிரம் அடைந்து உள்ளது. இந்த நிலையில் வடக்கன்குளத்தில் செஞ்சிலுவை சங்க தன்னார்வலர்கள், மருத்துவ துறை ஊழியர்கள், சுகாதார துறை மற்றும் ஊராட்சி துறையினர் இணைந்து கொரோனா நோய் அறிகுறி கண்டறியும் முகாமை நடத்தினர். இதில் தன்னார்வலர்கள், சுகாதார துறை மற்றும் மருத்துவத்துறை என 3 பேர் கொண்ட 20 குழுக்கள் பிரிக்கப்பட்டு வீடு வீடாக நேரில் சென்று கொரோனா தொற்று அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா? என கண்டறிந்தனர். இந்த முகாமை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதிக் தயாள், ராதாபுரம் தாசில்தார் கனகராஜ், வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் ஆகியோர் பார்வையிட்டனர்.