அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி- ஞானதிரவியம் எம்.பி. வழங்கினார்

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியை, ஞானதிரவியம் எம்.பி. வழங்கினார்.

Update: 2021-05-16 18:53 GMT
அம்பை, மே:
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியை, ஞானதிரவியம் எம்.பி. வழங்கினார்.

அம்பை

அம்பை சோலைபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் தமிழக அரசின் கொேரானா முதற்கட்ட நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் கலந்துகொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரத்தை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. அம்பை நகரச் செயலாளர் பிரபாகரன் பாண்டியன், நகர துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விக்கிரமசிங்கபுரம்- ஏர்வாடி

விக்கிரமசிங்கபுரம் கருத்தையாபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி ரூ.2000 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க. நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். ஞானதிரவியம் எம்.பி. கலந்து கொண்டு, கொரோனா நிவாரண நிதியை வழங்கினார். 
நிகழ்ச்சியில் மாஞ்சோலை மைக்கிள், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜெகன், குட்டி கணேசன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாவடியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஞானதிரவியம் எம்.பி. ரூ.2 ஆயிரத்தை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், களக்காடு யூனியன் முன்னாள் தலைவருமான ஜார்ஜ் கோசல், களக்காடு தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜன், களக்காடு வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வகருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்