முட்டி மோதிக்கொண்டு கிணற்றில் விழுந்த காளைகள்
முட்டி மோதிக்கொண்டு கிணற்றில் விழுந்த காளைகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.;
துவரங்குறிச்சி,
துவரங்குறிச்சி ஸ்டாலின் நகர் பகுதியில் வசிக்கும் செந்தில்குமார் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அந்தபகுதியில் உள்ள காளை ஒன்று ஜல்லிக்கட்டு காளையுடன் சண்டையிட்டது. இரண்டு காளைகளும் முட்டி மோதிக்கொண்டு அருகில் உள்ள சுமார் 30 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்தது. இதைப்பார்த்த செந்தில்குமார் குடும்பத்தினர் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஜல்லிக்கட்டு காளையை கயிறு கட்டி மீட்டனர். மற்றொரு காளையை கிரேன் உதவியுடன் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.