ஓசூரில், தனியார் நிறுவன ஊழியரிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்த பிரபல ரவுடி கைது
ஓசூரில், தனியார் நிறுவன ஊழியரிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்த பிரபல ரவுடி கைது
ஓசூர்:
ஓசூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
வழிப்பறி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அன்னியாளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 21). தனியார் நிறுவன ஊழியர்.
சம்பவத்தன்று இவர் ஓசூரில் கொத்தூர் ஜங்ஷன் அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அந்த நேரம் அங்கு வந்த ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்த மல்லேஷ் (39) என்பவர், கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்து, கத்திமுனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த 1½ பவுன் சங்கிலி மற்றும் ரூ.3,570 ஆகியவற்றை பறித்தார்
இந்த சம்பவத்தில் கிருஷ்ணமூர்த்தி லேசான காயம் அடைந்தார். அவர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பிரபல ரவுடி
இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் விசாரணை நடத்தி, மல்லேசை கைது செய்தார். கைதான மல்லேஷ் மீது ஓசூர் டவுன் அட்கோ, சூளகிரி, ராயக்கோட்டை போலீஸ் நிலையங்களில் ஆள் கடத்தல் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. மேலும் இவர் ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இது குறித்து பிரபல ரவுடியான மல்லேசிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.