என்ன அழகு... எத்தனை அழகு!
திருப்புவனம் அருகே கொந்தகை பகுதியில் பயிரிடப்பட்டு உள்ள நெற்பயிர் பசுமையாக காட்சியளிக்கிறது.
கண்ணுக்கு எட்டிய தூரம் பச்சை ஆடை உடுத்தினாற் போல பூமி தாய் காட்சியளிக்கிறாள்.. ஆஹா..! என்ன அழகு... எத்தனை அழகு என நம் கண்களை குளிர வைக்கிறது பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர். திருப்புவனம் அருகே கொந்தகை பகுதியில் தற்போது 2-ம் போக சாகுபடியில் பயிரிடப்பட்டு உள்ள நெற்பயிரின் அழகு தான் இது.