கொரோனா நோய் தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க காரைக்குடி மக்கள் மன்றம் சார்பில் ஆக்சிஜன் எந்திரங்களை வாங்கி அரசு மருத்துவமனைக்கு வழங்கினர். முதற்கட்டமாக ரூ.5 லட்சம் மதிப்பிலான 6 எந்திரங்களை மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் ராசகுமார் காரைக்குடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தர்மரிடம் வழங்கினார்.