விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 கைதிகளுக்கு கொரோனா

4 கைதிகளுக்கு கொரோனா

Update: 2021-05-16 17:37 GMT

விருத்தாசலம், 
விருத்தாசலம் கிளை சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகள் 4 பேரையும் சிறை அதிகாரிகள் ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விருத்தாசலம் கிளை சிறையில் 4 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் சிறை கைதிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்