கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பராமரிக்க நடவடிக்கை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் உள்ள 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-16 17:27 GMT
சிவகங்கை,

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் உள்ள 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

குழந்தைகளை பராமரிக்க நடவடிக்கை

இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்திட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் குழந்தைகளுக்கு உணவுடன் கூடிய தங்குமிடம் வசதி செய்து தரப்படவுள்ளது. அத்துடன் குழந்தைகளுக்கு உளவியல் சார்ந்த வழிகாட்டுதல், மருத்துவ உதவிகளுக்கு பரிந்துரை செய்தல், குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தொடர்பு எண்கள்

தேவைகள் இருப்பின் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 மற்றும் சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் தொலைபேசி எண் 98403-45234 மற்றும் அலுவலக தொலைபேசி எண்:- 04575-240166 ஆகியவைகளை தொடர்பு கொள்ளலாம்.
 இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்