சிந்தலவாடி மகாமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
சிந்தலவாடி மகாமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
லாலாபேட்டை
லாலாபேட்டை அருகே சிந்தலவாடியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பங்குனி தேரோட்டம் நடைபெறும். ஆனால் இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் கோவிலில் சிறப்பு பூஜை மட்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை கோவில் திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், பழம், விபூதி, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.