215 பேருக்கு கொரோனா

215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-05-16 16:52 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 215 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 12 ஆயிரத்து 153 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 128 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 9 ஆயிரத்து 869 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 2,ஆயிரத்து 135 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 149 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டிரைவர் ஆகியோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்