சுற்றித்திரிந்த 155 பேர் கைது

சிவகங்கை மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது சுற்றித்திரிந்த 155 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-05-16 16:36 GMT
சிவகங்கை,

முழு ஊரடங்கையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேவை இல்லாமல் சுற்றி திரிந்த 165 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்படி சிவகங்கை போலீஸ் சப்-டிவிசனில் 44 இருசக்கர வாகனங்களும், காரைக்குடி சப்-டிவிசனில் ஒரு கார் மற்றும் 44 இருசக்கர வாகனங்களும், திருப்பத்தூர் சப்-டிவிசனில் 14 இருசக்கர வாகனங்களும், தேவகோட்டை சப்-டிவிசனில் 35 இருசக்கர வாகனங்களும், மானாமதுரை சப்-டிவிசனில் 2 ஆட்டோ மற்றும் 25 இருசக்கர வாகனங்களும் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த 155 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்