தேனி மாவட்டத்தில் வாலிபர் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி

தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகினர். புதிதாக 672 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-16 16:10 GMT
தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகினர். புதிதாக 672 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 
5 பேர் சாவு
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிர்ப்பலியும் உயர்ந்து வருகிறது. 
இந்தநிலையில் கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரியகுளம் வடகரையை சேர்ந்த 60 வயது முதியவர், போடியை சேர்ந்த 67 வயது மூதாட்டி, கோகிலாபுரத்தை சேர்ந்த 40 வயது பெண், பெரியகுளத்தை சேர்ந்த 30 வயது வாலிபர், கோடாங்கிபட்டியை சேர்ந்த 58 வயது ஆண் ஆகிய 5 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொரோனாவுக்கு உயிர்ப்பலி தினசரி அதிகரித்து வருவது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
672 பேருக்கு தொற்று
இதற்கிடையே மாவட்டத்தில் நேற்று 672 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்களில் 88 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 33 பேர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 157 ஆக உயர்ந்தது.
மேலும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்றவர்களில் 402 பேர் நேற்று குணமடைந்தனர். தற்போது 4 ஆயிரத்து 73 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்