குத்தாலத்தில் தூக்குப்போட்டு சமையல் தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை
குத்தாலத்தில் தூக்குப்போட்டு சமையல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
குத்தாலம்,
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள விலாவடி காலனியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 35). சமையல் தொழிலாளியான இவர், மயிலாடுதுறை ராஜேஸ்வரி நகரில் வசித்து வரும் சந்தியா என்பவரை ஒரு ஆண்டிற்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்தநிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சந்தியா, மயிலாடுதுறையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் நீண்ட நாட்களாக மன வேதனையில் இருந்து வந்த சதீஷ் கடந்த 11-ந்் தேதி விலாவடி காலனியில் உள்ள அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவில்லையே என்று சதீசை அவரது தாய் தேடி உள்ளார். பின்னர் கடந்த 13-ந் தேதி, சதீஷ் வசித்து வரும் விலாவடி காலனியில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு அவா் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அவரது தாய் லட்சுமி கதறி அழுதார்.
பின்னர் இதுகுறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.