கொரோனா பரிசோதனை முடிவு 30 மணிநேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
கொரோனா பரிசோதனை முடிவு 30 மணிநேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.;
பல்லடம்
கொரோனா பரிசோதனை முடிவு 30 மணிநேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
ஆய்வு
பல்லடம், கரடிவாவி, அரசு மருத்துவமனைகளில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் குறித்து மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தொற்றை ஒழிக்கவும், பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து மருத்துவ சேவை செய்து வருகின்றனர். அவர்களை நன்றியுடன் பாராட்டுகிறேன். கொரோனா என்னும் கொடிய தொற்று பற்றி மக்களிடையே முன்பை விட விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனா தொற்று பரவலும் அதிகரித்து வருவதால் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
பரிசோதனை முடிவு
அவசியம் இன்றி சாலைகளில் மக்கள் நடமாட்டமும் இருந்து வருகிறது. அதற்காக காவல் துறையை கொண்டு மக்களை முடக்குவது சரியான வழி முறை அல்ல என்று அரசு நினைப்பதால் தான் மக்கள் ஒத்துழைப்போடு கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக தான் மீண்டும் மீண்டும் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. இதனை உணர்ந்து மக்கள் பூரண ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனா பரிசோதனை முடிவுகள் அதிகபட்சமாக 30 மணி நேரத்தில் உரியவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
பல்லடம் அரசு கல்லூரியில் முன் ஏற்பாடாக 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேவைபடும ்பட்சத்தில் அங்கு கொரோனா சிறப்பு வார்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இன்றி மக்களுக்கு செலுத்தப்படும். பல்லடம் அரசு மருத்துவமனை விரைவில் போதிய மருத்துவர்கள், ஊழியர்கள் நியமனம் செய்தும் போதுமான இடம் வசதி இருப்பதால் தேவையான கட்டிடம் மற்றும் ரத்த வங்கி, அறுவை சிகிச்சை கூடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்து மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.