முழு ஊரடங்கை மீறிய 153 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு

முழு ஊரடங்கை மீறிய 153 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.81 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-05-16 15:46 GMT
ஊட்டி,

முழு ஊரடங்கை மீறிய 153 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.81 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

ஊரடங்கை மீறியவர்கள் மீது வழக்கு

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க முக்கிய சாலைகள், இடங்களில் போலீசார் தடுப்புகள் வைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர். முழு ஊரடங்கை மீறி அவசியம் இல்லாமல் வெளியே சுற்றும் நபர்கள் மீது முழு ஊரடங்கை பின்பற்றாமல் இருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

நீலகிரியில் நேற்று முன்தினம் பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்த 137 நபர்களுக்கு தலா ரூ.200 என மொத்தம் ரூ.27 ஆயிரத்து 400 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்ற பொதுமக்கள் மற்றும் கடைகள் என 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.11,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் முழு ஊரடங்கை மதிக்காமல் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றியவர்களை கண்டறிந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

ரூ.81 ஆயிரம் அபராதம்

அதன்படி இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பெரிய வாகனங்கள் என 153 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தடையை மீறியதாக ரூ.81 ஆயிரத்து 500 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவில்லை.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வீட்டின் அருகே உள்ள கடைகளில் வாங்க வேண்டும். அதிக தூரம் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்