தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-05-16 15:21 GMT
தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் தலைமையில் மத்தியபாகம் தனிப்பிரிவு ஏட்டு சுப்பிரமணியன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டு இருந்தனர். உடனடியாக போலீசார், சூதாடிக் கொண்டு இருந்த கண்ணன் (வயது 46), யோகக்குமார் (31), நயினார் (41), சுந்தர் மகாலிங்கம் (35), லட்சுமணன், முத்துவேல் (36) மற்றும் மந்திரமூர்த்தி (37) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.8 ஆயிரத்து 700 ரொக்கப்பணமும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்