மது விற்ற வாலிபர் கைது
பழனியில் மது விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பழனி:
ஊரடங்கு அமலில் உள்ளதால் பழனியில், சட்டவிரோத மது விற்பனையை தடுக்க பழனி டவுன் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது தாராபுரம் சாலை பகுதியில் மது விற்ற அடிவாரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.