கொரோனா நிவாரண நிதி

திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுளிபட்டியில் ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.

Update: 2021-05-16 15:03 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்திலுள்ள 16 கூட்டுறவு ரேஷன்கடைகளில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. 

அதன்படி சாணார்பட்டி அருகேயுள்ள அஞ்சுகுளிபட்டி கூட்டுறவு ரேஷன் கடையில்  கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

இதற்கு தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினரும், மாவட்ட கவுன்சிலருமான விஜயன் தலைமை தாங்கி, 3,092 ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூ..2 ஆயிரத்தை வழங்கினார். 

மேலும் செய்திகள்