ஊத்துக்கோட்டையில் முககவசம் அணிந்து வந்த சிறுவர்களுக்கு மாலை அணிவித்து கவுரவித்த போலீசார்

ஊத்துக்கோட்டையில் முககவசம் அணிந்து வந்த சிறுவர்களுக்கு மாலை அணிவித்து கவுரவித்த போலீசார்.

Update: 2021-05-16 10:54 GMT
ஊத்துக்கோட்டை,

கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

அதாவது காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. தேனீர் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் அவசியமின்றி முககவசம் அணியாமல் வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இந்நிலையில் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி உத்தரவின்பேரில் அண்ணா சிலை அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோர் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சிறுவர்கள் சிலர் முககவசம் அணிந்து வருவதை கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் அவர்களை அழைத்து பூ மாலைகளை அணிவித்து கவுரவித்தார்.

மேலும் செய்திகள்