கொரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்களுக்கு உணவு வழங்கிய எம்.எல்.ஏ.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், திருவள்ளூரில் உள்ள உழவர் சந்தை அருகே நேற்று கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்களப்பணியாளர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2021-05-16 10:18 GMT

இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் தி.மு.க.எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கி கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோருக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்.

அவருடன் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், திருவள்ளூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்