பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு

பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்து கூடுதல் படுக்கை வசதிக்கு ஏற்பாடு செய்தார்.

Update: 2021-05-15 22:09 GMT
பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்து கூடுதல் படுக்கை வசதிக்கு ஏற்பாடு செய்தார்.
படுக்கை வசதி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு 550 படுக்கைகளுடன் ஆக்சிஜன் வசதியும் செய்யப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தனியார் ஆஸ்பத்திரிகளில் கூட இடம் இல்லை என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. அத்துடன் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற தகவல் பொதுமக்களை இன்னும் கவலை கொள்ள வைத்து இருக்கிறது.
இந்தநிலையில் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலேயே கூடுதல் படுக்கைகள் அமைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
அமைச்சர் ஆய்வு
அதன்படி நேற்று தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கூடுதல் படுக்கை வசதிகள் அமைக்கப்படும் இடம், அந்த பகுதிகளுக்கு நோயாளிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்லும் வசதி உள்ளிட்டவை குறித்து அமைச்சர் சு.முத்துசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, விரைவில் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்