கோபியில் கொரோனா பாதிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கோபி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

Update: 2021-05-15 20:23 GMT
கோபியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கோபி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அப்போது கோபி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகிறதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதில் நகராட்சி பொறியாளர் ராமசாமி, அ.தி.மு.க. வர்த்தக அணி மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 
முன்னதாக கோபி அரசு ஆஸ்பத்திரியில் தேவையான படுக்கை வசதிகள் உள்ளதா?  என்றும் ஆக்சிஜன் வசதி போதிய அளவுக்கு கையிருப்பில் உள்ளதா? எனவும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆய்வு நடத்தினார். 
இதைத்தொடர்ந்து கோபி ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சி தலைவர்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினர். இதில் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
---

மேலும் செய்திகள்