அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்
நெல்லையில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில், அனைத்து ஆஸ்பத்திரிகளிலும், கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களிலும் பிராண வாயு ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தனியார் நிறுவனங்களில் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள் நன்கொடையாக பெறப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஊரகப்பகுதியில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை மூலம் தற்போது சிகிச்சையில் இருக்கும் தீவிர நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை பூர்த்தி செய்யப்படும் நிலை உருவாகி உள்ளது.
இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.