மதுரை, மே.16-
மதுரை செல்லூர் தத்தனேரி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகள் வேல்விழி(வயது 23). கடந்த சில நாட்களாக இவர் மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்தும் செல்லூர் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.