நொய்யல்
கரூர் மாவட்டம் புகளூர் காகித ஆலை பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுதமதி தலைமையில் கிராம சுகாதார செவிலியர் விஜயலட்சுமி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், லேப் டெக்னீசியன், உதவியாளர்கள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கொரோனா முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசி போட்டனர். இதில் காகித ஆலை சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.