ஆறுமுகநேரி மெயின் பஜாரில் மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு
ஆறுமுகநேரி மெயின் பஜாரில் மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
ஆறுமுகநேரி, மே:
ஆறுமுகநேரி பகுதி நகர பஞ்சாயத்து ஆகும். இங்கு சுமார் 24ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்நகரை சுற்றி 6-க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. இங்கிருந்து மக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கான மெயின் இடம் பள்ளிவாசல் பஜார். இங்கிருந்து தான் சென்னை, பெங்களூர், கோவை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நெல்லை போன்ற பெரிய நகரங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் நிற்கக் கூடிய இடம். இந்த பேருந்து நிறுத்தத்தின் அருகில் போலீஸ் சேவை மையம் ஒன்று உள்ளது. அதன் அருகே பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் அமர்ந்திருக்க ஒரு காங்கிரிட் செட் உள்ளது. இதையடுத்து ஒரு பழக்கடையும் உள்ளது. இந்த மூன்று இடங்களுக்கும் முன்பு பெரிய பள்ளம் உள்ளது. இதில் மழை பெய்தால் மழை நீர் தேங்கி 15 நாட்கள் வரை இந்த தண்ணீரை அதிலேயே கிடக்கிறது. காரணம் அந்த இடத்தில் தரைக்கு கீழே பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது மிகவும் கீழே போனதால் அதற்கு மேல் மழை நீர் அப்படியே தேங்கி நிற்கிறது. இதனால்.பஸ்சுக்காக காத்து இருக்கக்கூடிய பயணிகளுக்கு சுகாதார கேடு விளைவிக்கிறது. எனவே அந்த இடத்தில் பள்ளத்தை மேடாக்க வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.