திருச்செந்தூரில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வந்தவர்களுக்கு ரோஜப்பூ கொடுத்து அறிவுரை கூறிய போலீசார்

திருச்செந்தூரில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வந்தவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து போலீசார் அறிவுரை வழங்கினர்.

Update: 2021-05-15 17:51 GMT
திருச்செந்தூர், மே:
தமிழகத்தில் கொரோன 2-ம் கட்ட அலை வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து முழு ஊரடங்கை கடுமையாக்க தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த சில நாட்களாக வாகனங்களில் வருபவர்களை கண்டு கொள்ளாத போலீசார் அரசின், கெடுபிடியான உத்தரவுகளுக்கு பின்னர் கடும் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் தலைமையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் திருச்செந்தூர் மெயின் ஆர்ச் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களில் சுற்றியவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ரோஜாப்பூ வழங்கி ஊரடங்கு குறித்து அறிவுரை கூறியும், எச்சரித்தும் அனுப்பி வைத்தார். தொடர்ந்து டிரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.

மேலும் செய்திகள்