ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
ஆத்தூர், ஆறுமுகநேரியில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.;
ஆறுமுகநேரி, மே:
ஆத்தூர், ஆறுமுகநேரியில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
கொரோனா நிவாரணம்
ஆத்தூர் கஸ்பா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செந்தூர் உதவி கலெக்டர் தன பிரியா தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க தலைவர் ஹேமமாலினி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ரூ.2 ஆயிரம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார், ஆத்தூர் நகர தி.மு.க. செயலாளர் முருகப்பெருமாள், ஆத்தூர் நகர தி.மு.க. அவைத்தலைவர் அப்துல் காதர், மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியம், கூட்டுறவு சங்க முன்னாள் நிர்வாகஸ்தர் கணேசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கே.எஸ்.கோபி, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் கமாலுதீன், வார்டு செயலாளர் பி.வி.கண்ணன், புன்னக்காயல் கிராம பஞ்சாயத்து தலைவி சோபியா ஆல்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஆறுமுகநேரி ஏ.கே.எல் கூட்டுறவு பண்டகசாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர தி.மு.க. செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் ஏ.கே.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.2 ஆயிரத்தை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு பண்டகசாலை நிர்வாகிகள், வட்ட வழங்கல் அதிகாரி பொண்ணு லட்சுமி, தாசில்தார் (பொறுப்பு) ஞானராஜ், வருவாய் அதிகாரி பிளாரன்ஸ் ஜெயராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எம்.சவேரியார்புரம்
தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் எம். சவேரியார்புரம் ரேஷன் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2ஆயிரத்தை நேற்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கி தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சியில் தாசில்தார்கள் ஜஸ்டின் செல்லத்துரை, ஞானராஜ் வதனாள், துணை பதிவாளர் ரவீந்திரன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மெஞ்ஞானபுரம்- உடன்குடி
லட்சுமிபுரம், மெஞ்ஞானபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு ரூ.2 ஆயிரத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
உடன்குடி ஒன்றிய பகுதிக்குட்பட்ட வெள்ளாளன்விளை, மெஞ்ஞானபுரம், உடன்குடி ஆகிய பகுதியில் உள்ள 3 ரேஷன் கடைகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ரூ.2 ஆயிரம் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவிராஜா, செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அப்துல் ஹமீது, உடன்குடி நகர இளைஞர் அணி அமைப்பாளர் அஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம்
ஆறுமுகநேரி ஏ.கே.எல் கூட்டுறவு பண்டகசாலை ரேஷன் கடையில் காயல்பட்டினம் பகுதியில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் காயல்பட்டினம் நகர தி.மு.க. செயலாளர் கே.ஏ.எஸ்.முத்து முகமது, மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடை சுகு, நகர அவைத்தலைவர் முகமது முகைதீன், நகர துணைச் செயலாளர்கள் லேண்ட் முகமது முகைதீன், ஏ.பி.கதிரவன், நகர இளைஞரணி அமைப்பாளர் கலிலூர் ரகுமான், முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.