கருவேப்பிலங்குறிச்சி அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

கருவேப்பிலங்குறிச்சி அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தாா். இதுகுறித்தஜ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Update: 2021-05-15 17:35 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள வண்ணான்குடிகாடு கிராமத்தில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

அதன்பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் இறந்து கிடந்தவர் வண்ணான்குடிகாடு மேலத்தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி சின்னப்பிள்ளை என்பது தெரியவந்தது. ஆனால் அவர் இறந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

 இதையடுத்து சின்னப்பிள்ளையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னப்பிள்ளை கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்